×

புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அதன்படி கேரளாவில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 31ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனால் மத்திய அரசுக்கு அந்த சட்டங்களை திரும்பப்பெறுவதில் அழுத்தம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் முதல்வர் நாராயணசாமி உடனடியாக புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டி வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் வரும் 18-ம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது. வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Legislative Assembly ,Pondicherry , Puducherry, Legislature, Agricultural Laws, Resolutions, Execution
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...