துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய 863 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனை நடத்தினர். அவர்களில், சென்னையை சேர்ந்த திருவேடத்து கனி (32), புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் (36) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பேஸ்ட்களை பறிமுதல் செய்தனர். அதன் எடை 863 கிராம். மதிப்பு ரூ.44 லட்சம். இதையடுத்து 2 வேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>