பொங்கலுக்கு ரூ.417 கோடி மதுவிற்பனை: திருச்சி மண்டலம் முதலிடம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாளில் ரூ.417.18 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதேபோல், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாக்கும். அந்தவகையில், 2021 புத்தாண்டு பண்டிகைக்கு ரூ.297 கோடி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதேபோல், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

குறிப்பாக, ரூ.2 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் ரூ.10 லட்சம் வரையிலான மதுபானங்களும், ரூ.4 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் ரூ.18 லட்சம் வரையிலான மதுபானங்களை இருப்பு வைக்கப்பட்டது. மேலும், புதுவகையான மதுபானங்களின் இருப்பை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. எனவே, 5 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.750 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சானிடைசர் இல்லாமலும், முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் குடிமகன்கள் மதுவகைகளை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாளில் ரூ.417.18 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையாகியுள்ளது.

அதன்படி, கடந்த 13ம் தேதி ரூ.147.75 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று 14ம் தேதி ரூ.269.43 கோடிக்கும் மதுவிற்பனையாகியுள்ளது. மொத்தமாக 2 நாளில் மட்டும் ரூ.417.18 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று திருச்சி மண்டலத்தில் தான் மதுவிற்பனை அதிகமாக நடந்துள்ளது.

Related Stories: