×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றதில் போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய்

சென்னை: இந்ந ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வருகின்ற வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்தும் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. மேலும், பேருந்துகளில் 100 பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டுதல்களான கட்டாய முகக்கவசம், வெப்பமாணி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெரிமுறைகளை பின்பற்றி இந்த பண்டிகைக்கு பேருந்துகளை இயக்கிடுமாறு,  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

 பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்த 11.01.2021, 12.01.2021, 13.01.2021 மற்றும் 14.01.2021 காலை 6.00 மணி வரையில், சென்னையிலிருந்து 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5,06,712 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நாளது வரையில், 1,22,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையிலிருந்து 45,275 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து 77,325 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளிலிருந்து மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ள பயணிகள் திரும்பிட ஏதுவாக, வரும் 17.01.2021, 18.01.2021 மற்றும் 19.01.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 9,543 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5,727 பேருந்துகள் என ஆகமொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


Tags : home ,Transport Corporation ,festival ,Pongal ,eve , பொங்கல் பண்டிகை, சொந்த ஊர் ,போக்குவரத்துக் , வருவாய்
× RELATED ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக்...