×

ரிப்பன் மாளிகையில் பொங்கல் விழா

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் அனுமதியுடன் துணை ஆணையர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தலின்படி வருவாய் துறை சார்பில், பொங்கல் விழா மற்றும் உணவுத்திருவிழா நேற்று  நடந்தது.
இதில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு, உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், ஊழியர்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பான கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு மாலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து துறை ஊழியர்களும் இணைந்து பொங்கலிட்டு, ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதையடுத்து உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டு தாங்கள் சமைத்த உணவுகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

Tags : Pongal Festival ,Ribbon House , Pongal Festival at Ribbon House
× RELATED சமத்துவ பொங்கல் விழா