17 முதல் 19ம் தேதி வரை எம்ஜிஆர் பிறந்தநாள் அதிமுக பொதுக்கூட்டங்கள்

சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17ம் தேதி (ஞாயிறு) முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்கள், அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்திலும், 19ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை புறநகர் மாவட்டத்திலும் பேச உள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவர். எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

Related Stories: