×

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மகரவிளக்கு சிறப்பு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று (14ம் தேதி) பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. பந்தளத்தில் இருந்து பவனியாக புறப்பட்ட திருவாபரண பெட்டி இன்று மாலை 5.30க்கு சரங்குத்தி வந்தடையும். பின்னர் சன்னிதானம் கொண்டுவரப்படும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரர் ராஜீவரர் மற்றும் மேல்சாந்தி பெற்று ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவர். இதையடுத்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். தொடர்ந்து கற்பூர ஆராதனை நடைபெறும். பக்தர்கள் வரும் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.

Tags : Maharajoti ,Sabarimala , Maharajoti darshan today at Sabarimala
× RELATED சபரிமலையில் மகரஜோதி பார்த்து பக்தர்கள் பரவசம்