×

கேரளாவில் புதிய மாற்றம் சிறை கைதிகள் சீருடை டி-ஷர்ட், பெர்முடாஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் இனி சிறை கைதிகளுக்கு டி-ஷர்ட் மற்றும் பெர்முடாஸ் சீருடையாக வழங்கப்படுகிறது. கேரள சிறைச்சாலைகளில் கைதிகள் வேட்டியை பயன்படுத்தி தூக்குபோட்டு தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் சிறை கைதிகளுக்கு ஆடை விஷயத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் கோழிக்கோடு சிறையில் ஒரு கைதி கைலியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சிறைச்சாலை டிஜிபி ரிஷிராஜ் சிங், கைதிகளுக்கு டி-ஷர்ட் மற்றும் பெர்முடாஸ் வழங்க முடிவு செய்துள்ளார். அதுபோல பெண் கைதிகளுக்கு சுடிதார் வழங்கப்படும். முதற்கட்டமாக கோழிக்கோடு சிறையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.

Tags : prison inmates ,Kerala , New change in Kerala prison inmates uniform t-shirt, bermudas
× RELATED நெரிசல் காரணமாக ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்