79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்

இந்தூர்: சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில், விதர்பா அணியுடனான எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 79 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசியது. சவுராஷ்டிரா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன் குவித்தது. அவி பரோட் 93 ரன் (44 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்), பிரேரக் மன்கட் 59 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), அர்பித் வாசவதா 39 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த் சவுகான் 19* ரன் விளாசினர். விதர்பா பந்துவீச்சில் தர்ஷன் நல்கண்டே 4, யாஷ் தாகூர் 2, அக்‌ஷர் கர்னிவார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய விதர்பா அணி 17.2 ஓவரில் 154 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஜிதேஷ் ஷர்மா 43 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சித்தேஷ் வத், அக்‌ஷய் தலா 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் சேத்தன் சகாரியா 4 ஓவரில் 1 மெய்டன்  உட்பட 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பிரேரக் 4, உனத்கட் 1 விக்கெட் வீழ்த்தினர். சவுராஷ்டிரா அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Related Stories:

>