×

தங்கள் நாட்டுக்கு உளவு பார்க்க வந்தனரா?: ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக கைதான 2 சீனர்களிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை..!

டெல்லி: ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 சீனர்களிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லியோயா மாவ்(38), யுவன் லுன் (28) ஆகியோரை ரா அமைப்பு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். நாட்டில் ஆன்லைன் கடன் செயலிகள் (லோன் ஆப்) விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.

எனவே, இதுபோன்ற செயலிகளிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் ஆன்லைன் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆன்லைவன் கடன் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில ஆன்லைன் கடன் செயலி மோசடி தொடர்பாக சீன நாட்டவர் உட்பட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சீனர்கள் 2 பேரும் தங்கள் நாட்டுக்கு உளவு பார்க்க வந்தனரா என்பது குறித்து ரா அமைப்பு விசாரணை நடத்துகிறது. மேலும், டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட சீன மொழி அறிந்த மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடந்தது.

இதில், 2 சீனர்களும் 46 கணினி மென்பொருள்களை பயன்படுத்தி கடன் பெற்றவர்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இருவரில் ஒருவர் பி.டெக் படிப்பும் மற்றவர் பள்ளிப் படிப்பையும் முடித்தவர்கள் ஆவர். போலீஸ் காவலில் நடந்த விசாரணைக்கு சீனர்கள் 2 பெரும் முழு ஓத்துழைப்பு தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chinese ,country ,Central Intelligence Agency , Delhi, online credit, fraud, Chinese, Central Intelligence Agency, investigation
× RELATED ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன...