மன்னிப்பு கேட்டார் பெய்ன்

சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் அஷ்வின், விஹாரியை கலாய்த்த ஆஸி. கேப்டன்/விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அஷ்வின் - விஹாரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியதை சகிக்க முடியாத பெய்ன், அவர்களின் கவனத்தை சிதைக்கும் முயற்சியாக கிண்டலாகப் பேசி சீண்டினார். இதற்கு அஷ்வின் உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்ததால் பெய்ன் வாயடைத்துப் போனதுடன், பல கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டார்.

அவரது இந்த சொதப்பலான கீப்பிங் ஆஸி. அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் பொறுப்பில் இருக்கும் பெய்னின் இந்த நடவடிக்கையை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கண்டித்துள்ள நிலையில், சமூகவலைத் தளங்களிலும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார் பெய்ன். மேலும், சிட்னி டெஸ்டில் நடுவரின் தீர்ப்புக்கு கட்டுப்படாமல் அதிருப்தி தெரிவித்ததற்காக அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>