மசாலா முட்டை ரோல்

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.கடாயில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, உப்பு, மசாலாத்தூள் வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு அதில் முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, மல்லித்தழையைத் தூவி நன்றாக கிளறி இறக்கவும். சப்பாத்தியில் முட்டை கலவையை வைத்து ரோல் செய்து பல் குச்சியால் சொருகி இரண்டாக வெட்டி பரிமாறவும்.