தங்கம் விலை 3 நாட்களாக சரிவு சவரன் ரூ.37,600க்கு விற்பனை

சென்னை, ஜன.10: தங்கம் விலை கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,384 அளவுக்கு அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலை கடந்த 7ம் தேதி முதல் குறைந்து வருகிறது. 7ம் தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.51 குறைந்து ஒரு கிராம் ரூ.4,754க்கும், சவரனுக்கு ரூ.408 குறைந்து ஒரு சவரன் ரூ.38,032க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் 3வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.54 குறைந்து ஒரு கிராம் ரூ.4,700க்கும், சவரனுக்கு ரூ.432 குறைந்து ஒரு சவரன் ரூ.37,600க்கும் விற்கப்பட்டது. 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,480 அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: