சோமாஸ்

எப்படி செய்வது?

மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, சர்க்கரை 1 ஸ்பூன் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ந்து பிசைந்து கொள்ளவும். இதனை 2 மணி நேரம் ஊற விடவும். தேங்காயை துருவி வாணலியில் நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும். முந்திரிப்பருப்பு, கசகசாவை தனித்தனியாக நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும். அவற்றில் வறுத்த கசகசா, முந்திரி, ஏலக்காய், தேங்காய் போட்டு நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரியாக செய்து பூரணத்தை வைத்து மடக்கி, சோமாஸ் கரண்டியால் வெட்டி பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மெல்லிய காரம், இனிப்பு கலந்த சுவையுடன் சோமாஸ் ரெடி.