பகல் கனவு காணுங்கள்!

கனவுகள் நம் ஆழமனதின் ரகசியம் கூறும் அற்புதங்கள். பொதுவாக கனவுகள் உறக்கத்தில் Rem எனப்படும் வேகமாகக் கண்கள் அசையும் நிலையில்தான் தோன்றும். அரை விழிப்பு நிலையில் தோன்றாது. ஆனால், சில சமயங்களில் அது அரை விழிப்பு நிலையிலும் தோன்றும் அதனையே லூசிட் கனவுகள் என்பார்கள். சில தருணங்களில் நாம் கனவு காண்கிறோம் என்று உணர்ந்தபடியே கனவு கண்டுகொண்டு இருப்போம் இல்லையா? அந்த நிலைதான் லூசிட் கனவு நிலை.சாதாரண கனவுக்கும் லூசிட் கனவுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு சாதாரண கனவு தோன்றும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்மால் கவனிக்க மட்டுமே முடியும். நம் செயல்களையோ அந்தக் கனவையோ நம்மால் கட்டுப்படுத்த இயலாது. காலை எழுந்தவுடன் இப்படி ஒரு கனவு வந்தது என்பதை நினைவுகூர மட்டுமே இயலும்.

ஆனால் -

லூசிட் கனவுகள் இப்படி அல்ல. இவற்றில் நாம் இயங்க முடியும். இக்கனவுகளை நாம் இயக்கவோ நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ இயலும். லூசிட் கனவுகளும் நம் ஆழ் மனதோடு தொடர்புடையவைதான். எனவே, சரியான பயிற்சி இருந்து லூசிட் கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பழகினால், ஆழ்மனதை ஓர் எல்லை வரை கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்கிறார்கள். இதனால், நம்மை முழுமையாக இயக்கும் கட்டுப்பாடு நம் மேல் மனதுக்கு அல்லது தர்க்க மனதுக்குக் கிடைக்கும். நாம் நமக்கு நம் வாழ்வில் தேவையான லூசிட் கனவு வழியே ஆழ்மனதுக்குச் சொல்லி, வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளலாம். நம்மை நாமே மாற்றிக்கொள்ளலாம் என்று லூசிட் கனவில் தேர்ந்த உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். லூசிட் ட்ரீம் நம் வாழ்வை நாமே வடிவமைக்க உதவும் அட்சயபாத்திரம், தியானத்தைவிட வலிமையான டெக்னிக் என்கிறார்கள்.

Related Stories:

>