ஆதார் கார்டு: அசால்ட்டா வாங்கலாம்!

ஆதார் அட்டை என்பது பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற குடியுரிமைக்கான சான்றல்ல. அடையாளத்துக்கானது மட்டுமே. ஆதார் அடையாள அட்டையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது. அதே நேரம் ஆதாருக்குத் தடை விதிக்கவும் மறுத்துத் தீர்ப்பளித்தது. இதனால், பல்வேறு அரசு சேவைகள் மற்றும் மத்திய அரசின் உதவிகளைப் பெற ஆதார் அவசியம் என்றாகிவிட்டது.

*ஆதார் அட்டை  இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் (யுனிக் ஐடன்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

*இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது.

*மூன்றாம் பாலினத்தவர்கள் எனப்படும் திருநங்கை நம்பிகளும் இதைப் பெறலாம். அவர்கள், தங்களை ஆண், பெண் என்றோ குறிப்பிட அவசியமில்லை.

*ஆதார் எண் சமையல் எரி வாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டசேவைகளைப் பெற உதவுகிறது.

*கைக்குழந்தைகள் உட்பட எந்த ஒரு வயதினரும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தைகள் 5 வயதை எட்டிவிட்டால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மின் அஞ்சல், மொபைல் எண் போன்ற தகவல்கள் தேவையில்லை

.

*கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கண் பார்வையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ இழந்தவர்கள் கூட ஆதார் அட்டை பெற பதிவு செய்ய முடியும். அவர்களுக்கு பயோமெட்ரிக் தகவல் தேவையில்லை.

உங்கள் ஆதாரில் திருத்தம் செய்யஆன்லைனில் ஆதார் மாற்றம் செய்ய வேண்டுமெனில் நீங்கள், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். கூடுதலாக மின் அஞ்சலையும் சேர்த்து இருந்தால் இன்னும் சுலபம்.  வீட்டு முகவரியில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஆதார் இணையதளத்திலேயே செய்துகொள்ளலாம். https://ssup.uidai.gov.in/ssup/  என்ற  இணைய

தளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தால், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து உங்களின் புதிய மற்றும் பழைய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.வீட்டு முகவரியைத் தவிர்த்து வேறு எந்த விதமான திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும்  ஆதார் இ-சேவை மையத்தைத்தான் அணுக வேண்டும். பெயர் திருத்தம் பிறந்த தேதி திருத்தம் ஆகியவற்றுக்குச் சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இ-சேவை  மையத்துக்குச் செல்லும்போது அசல் ஆதாரங்களை எடுத்துச்செல்ல வேண்டும். நகல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஆதார் கட்டணம்

ஆதார் மையங்களில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், பாலினம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் திருத்த 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பயோமெட்ரிக், புகைப்படத்திருத்தம் போன்ற தகவல்களைத் திருத்த 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கின்றனர். இதுவே குழந்தைகளுக்கு இலவசமாகத் திருத்தம் செய்யப்படுகிறது.கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க 100 ரூபாயும், ஆன்லைனில் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை ‘கலர் பிரின்ட்’ எடுப்பதற்கும், 30 ரூபாயும் செலுத்த வேண்டும் என ஆதார் எண்களுக்கான ஆணையம் (UIDAI)

கூறியுள்ளது.

அட்டையில் மாற்றங்கள் செய்வது எப்படி?

UIDAI இணைய போர்ட்டலுக்குச் சென்று  ஆதார் கார்டை அப்டேட் செய்துகொள்ளலாம். இணைய முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Update Aadhar என்ற பிரிவுக்குள் சென்று, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். அதை என்டர் செய்ய வேண்டும்.

‘Address Update’ என்ற கட்டத்தில் தேவையான தகவல்களை வழங்கவும். புதிய முகவரியை டைப்  செய்யவும். இந்த முகவரிக்குத்தான் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்களுக்கு தபாலில் வரும்.

இவ்வாறு முகவரியை பூர்த்தி செய்த பிறகு, உங்களது  முகவரி மாற்ற வேண்டிய அசல் முகவரி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஆதார் அட்டை இல்லாதோர் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். அங்கு ஆதார் மையத்தில் இருக்கும் அலுவலர் ஒரு விண்ணப்பம் கொடுப்பார். அதை பூர்த்திச்செய்து அந்த அலுவலரிடம் கொடுத்த  பின் புகைப்படம் கண்ணின் கருவிழிகள் , கைரேகை பதிவு செய்த பிறகு ‘‘Acknowledgement Receipt” தருவார். ஆதார் அட்டையை பதிவு செய்வதற்கான குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும். சில நாட்கள் கழித்து இந்த ‘‘Acknowledgement No” யை இணையதளம் மூலம் பதிவிட்டு ஆதார் அட்டையின் நிலையை கண்டறியலாம்.

ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய சில ஆவணங்கள் கட்டாயம்

* வங்கி பாஸ்புக்,

* தொலைபேசி  கட்டணம் பில்

* கேஸ் பில்

* பாஸ்போர்ட்

* ரேஷன் கார்டு

* வாக்காளர் அடையாள அட்டை,

* டிரைவிங் லைசென்ஸ்

மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனில் நீங்கள் உங்கள் பகுதி VAO அல்லது குரூப்-ஏ நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிடம் ஒப்பம் பெற்ற கடிதத்தை நீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.

தந்தை அல்லது கணவர் பெயரை திருத்த வேண்டுமா?

நீங்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்ற, முகவரி மாற்றம் செய்ய என்ற OPTION-ஐ  CLICK செய்து கொள்ளுங்கள்.

*பாஸ்போர்ட்

* ரேஷன் கார்டு

* வங்கி பாஸ்புக்

* தொலைபேசி கட்டணம் பில்

* கேஸ் பில்

* வாக்காளர்  அடையாள அட்டை

* டிரைவிங் லைசென்ஸ்

இதற்கு நீங்கள் முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தை உங்களின் செல்போனில் ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்பு இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.பிறகு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை சரியாக உள்ளீடு செய்து ‘SUBMIT’ என்ற OPTIONஐ கிளிக் செய்தால் தங்களின் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.. அந்த OTP யை உள்ளீடு செய்யவும், உள்ளீடு செய்த பின்பு உங்களின் ஆதாரை திருத்தம் செய்வதற்கான  OPTIONS வரும்.முகவரி திருத்தம் செய்வதற்கான OPTION-ஐ CLICK செய்யுங்கள். அதில் உங்களின் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் சரியாக Update செய்த பிறகு, தேவையான சான்றிதழை Upload செய்ய வேண்டும். அதன் பிறகு பணம் செலுத்தும் வசதியை Click செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும், நீங்கள் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்.

மொபைல் போனில் ஆதார் கார்டு!

முதலில்  நீங்கள் https://eaadhaar.uidai.gov.in  என்ற ஆதார் ஆணையத்தின் L பக்கத்தின் உள்ளே சென்று  குறிப்பிட்ட LINK ல் உங்கள் ஆதார் எண்ணை பதிவிடுங்கள் பின்பு SEND OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 நம்பர் PASSWORD அனுப்பப்படும்.அதை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து, Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை DOWNLOAD செய்துவிடலாம்.

Related Stories: