ஹால் டிக்கெட்டில் தாய் என சன்னி லியோன் பெயர்!

நன்றி குங்குமம்

வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளில் உரிய நபருக்கு பதிலாக பிரபலங்களின் படங்களும், விலங்குகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால், சற்று விநோதமாக பீகாரில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவனின் ஹால் டிக்கெட்டில் அவரது தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி என்றும், தாய் நடிகை சன்னிலியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது! இருப்பிட முகவரி, பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற இடமான சட்டர்புஜ் ஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த ஹால்டிக்கெட்டின் ஸ்கிரீன் ஷாட்டை பார்த்த பீகார் மாநில அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு  உத்தரவிட்டுள்ளார்.‘‘ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவலுக்கு முழுப்பொறுப்பும் மாணவன் மட்டுமே. இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...’’ என்கிறார் ராம் கிருஷ்ண தாகூர்.

‘‘சத்தியமாக அவர் என் குழந்தை இல்லை...’’ என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் இம்ரான் ஹஸ்மி.சன்னி லியோன் இன்னும் பதில் அளிக்கவில்லை!

அன்னம் அரசு

Related Stories:

>