ஈஸி காலாகன்ட்

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் துருவிய பனீர், கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் கலந்து, சிறு தீயில் வைத்து அடிப்பிடிக்காமலும், கருகாமலும் கிளறவும். 7-8 நிமிடங்களில் கெட்டியாகி திரண்டு வரும்பொழுது அடுப்பை நிறுத்தவும். ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை கொட்டி சமமாகப் பரப்பி விடவும். சூடு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பிஸ்தா, பாதாம் கலவையால் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு:
பாலை திரிய வைத்து பனீர் எடுத்து காலாகன்ட் செய்யலாம். தேவையானால் குங்குமப்பூ சேர்த்து லைட் ஆரஞ்சு நிறத்தில் காலாகன்ட் செய்யலாம். அலங்கரிக்க உலர்ந்த அத்திப்பழம், உலர்ந்த திராட்சை, வால்நட்ஸ் சேர்க்கலாம்.