×

30 மற்றும் 20 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் வரும் 28ம் தேதி ஏலம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ரூ.3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 28ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 28ம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post 30 மற்றும் 20 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் வரும் 28ம் தேதி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...