டர்னிப் பொரியல்

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை தாளித்து டர்னிப் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.