மத்ரி பூரி

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, ரவை, சீரகம், உப்பு அனைத்தையும் கலந்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சின்ன சின்னதாக திரட்டி ஒரு முள் கரண்டியால் மேலே குத்தி அல்லது கத்தியால் கோடு போட்டு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: முள் கரண்டி, கத்தியால் கோடு போடுவதால் பூரி உப்பாமல் வரும். நமத்தும் போகாது.