புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது.இதன் மூலம் புதிய ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதோடு, 5 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரசுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த வைரஸ் உலகுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவோ தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது

Related Stories: