செவ்வாய் கோளில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டம்

சீனாவின் சாங்கி - 5 விண்கலம் சமீபத்தில் நிலவில் இருந்து பாறை மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இந்த வெற்றியை தொடர்ந்து இதே போன்று செவ்வாய் கோளில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை தயாரித்துள்ளது. வரும் 2030க்குள் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீன விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கோளில் இருந்து மண், பாறை துகள் மாதிரியை பூமிக்கு கொண்டு வரும் பணியில் அமெரிக்காவின் நாசா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையங்கள் ஈடுபட்டுள்ளன.

Related Stories:

>