உருளை ஃப்ரை

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கில் உப்பு சேர்த்து வேகவைத்து தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்பு மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி ஃப்ரையாக வந்ததும் இறக்கவும். நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.