கடலை கத்தரி ஃப்ரை

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், வேர்க்கடலை, பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு கத்தரிக்காய் போட்டு சிறிது நேரம் வதக்கி உப்பு, இட்லி பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறி நன்கு வறுவலாக வந்ததும் இறக்கவும்.