குளிர் கால குளியல்

* குளிர்காலத்தில் ஷவரில் குளிப்பதையும், அதிக சூடான நீரில் குளிப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். ஷவரில் இருந்து  வேகமாக உடலில் அடிக்கும் நீரும், சூடான நீரும் சருமத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகளின் வேலையை தடை செய்துவிடும். இதனால் சருமம் எளிதில் உலர்ந்து போய்விடுவதால் வெள்ளை  திட்டுகள் ஏற்படக் கூடும்.

* மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளிப்பது நல்லது. ஷவரில் குளிக்காமல் தண்ணீரை எடுத்து ஊற்றிக் குளிப்பது நலம் தரும்.

* சோப்பில் PH அளவு எந்த அளவு இருக்கிறது என பார்த்து பயன்படுத்த வேண்டும். அமிலம் மற்றும் காரத்தன்மையின் அளவு சருமத்தில் நடுநிலையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* குளித்தவுடன் டவலை வைத்து அழுத்தி சருமத்தை துடைக்கக் கூடாது. இல்லாவிட்டால் சருமம் விரைவில் உலர்ந்துவிடும்.

* பொதுவாக சருமத்தின் PH அளவு 5.5 இருப்பதே சரியானது. அந்த அளவுக்குக் கீழே போனால் அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். இந்த அளவுக்கு மேலே போனாலோ காரத்தன்மை கொண்டதாகி விடும். அதனால், சருமத்தின் பி.ஹெச் அளவை சமமாக வைக்கிற பாடி வாஷ் பயன்படுத்தி குளியுங்கள்.

* முகத்தின் PH அளவு உடலின் PH அளவிலிருந்து வேறுபடும். எனவே, மாயிச்சரைசிங் பொருட்கள் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவி வரவேண்டும். இதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். சோப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

* பாடி வாஷ் வாங்கும்போது தேய்த்து குளிப்பதற்காக பிளாஸ்டிக் நார் அல்லது சிந்தடிக் நார் கொடுப்பார்கள். இவற்றை கொண்டு  தேய்த்து குளிக்கக் கூடாது. இவ்வகை நாரைக் கொண்டு அதிகம் தேய்த்து குளிப்பவர்களின் சருமத்தில் பிக்மென்ட்டேஷன்   எனப்படுகிற மங்கு அதிகமாகி சருமம் கருப்பு நிறமாக மாறிவிட வாய்ப்பு அதிகம்.

* பாடி வாஷை கொண்டு கையால் தேய்த்து குளிப்பதே சிறந்தது. குளித்த பின் டவலை சருமத்தில் வைத்து மெதுவாக ஒற்றி எடுத்து மாயிசரைசிங் க்ரீம்களை தடவிக் கொண்டால் நாள் முழுவதும் சருமம் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

- விஜய் மகேந்திரன்

Related Stories: