சன்னா மசாலா தோசை

எப்படிச் செய்வது:

கொண்டைக்கடலையை 6 - 7 மணி நேரத்துக்கு குறையாமல் ஊற வைக்கவும். ஊறியதும் நீரை வடித்து விட்டு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முதலில் சீரகம், பெருஞ்சீரகம் போட்டு தாளித்து, பின் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளியை சேர்த்து கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, பிரிஞ்சி இலையை போட்டு தாளிக்கவும். இத்துடன் அரைத்த பொருள்களை ஊற்றி கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். கொண்டைக்கடலை, மசாலாவுடன் நன்றாக கலந்ததும் கொத்தமல்லி தழையை தூவவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை மெல்லியதாக ஊற்றவும். இதன்மேல் சன்னா மசாலாவை பரவ விட்டு, திருப்பி போடாமல் எடுத்து பரிமறவும். சூப்பராக இருக்கும்.