சாக்லெட் வெனிலா மில்க் ஸ்வீட்

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் பாலைச் சேர்த்து கொதிக்க விடாமல் மிதமானச் சூட்டில் சூடு செய்யவும். சூடு ஆறியதும் எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பாலைத் திரிய வைக்கவும். மஸ்லின் துணி அல்லது வெள்ளைத் துணியில் திரிந்த பாலைச் சேர்த்து, அதன் தண்ணீரை வடித்து பிழிந்து கொள்ளவும். மிகவும் அழுத்திப் பிழிய வேண்டாம். இந்த பனீரில் எலுமிச்சை வாடை போகும்வரை போதுமான தண்ணீரில் துணியுடன் அலசவும்.

பனீரை மட்டும் தனியே எடுத்து, அத்துடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ், கோகோ பவுடர் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி, நான்ஸ்டிக் பேனில் சேர்த்து சிறுத் தீயில் கட்டியில்லாமல், நன்கு திரண்டு வரும்வரை 5-7 நிமிடங்கள் அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும். சூடு ஆறியதும் தட்டில் கொட்டி மிருதுவாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். துருவிய பாதாம், பிஸ்தாவை ஒன்றாக கலந்து உருண்டையின் மேல் அலங்கரித்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: கோகோ பவுடர் இல்லையென்றால் டார்க் சாக்லெட்டை பயன்படுத்தலாம். பால் திரிந்ததும் அந்த தண்ணீரை வீண் செய்யாமல், பாட்டிலில் சேர்த்து வைத்து எலுமிச்சைக்கு பதில் பால் திரியப் பயன்படுத்தலாம். உருண்டைப் பிடிக்கும்போது கையில் பிசுபிசுவென்று ஒட்டினால் சிறிது நெய்யைச் சேர்த்தால் கையில் பனீர் கலவை ஒட்டாது.