உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு !

நன்றி குங்குமம் தோழி

சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் அமைப்பும் கிழக்கு ஆசியாவின் இஞ்சியான் பல்கலைக்கழக பேராசிரியர் கிம் ஸியூன் க்யூ என்பவரும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு பற்றிய ஆய்வுதான் அது. 21 நாடுகளில் இருந்து 39 பிரபல ப்ராண்ட் உப்பு மாதிரிகள் வரவழைக்கப்பட்டன. அதை கொண்டு தான் சமீபத்தில் இவர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், 90 சதவிகித உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று கண்டறிந்தனர்.

இந்த 21 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிர்ச்சியாக உள்ளதா? பிளாஸ்டிக் நம்முடைய வாழ்வில் முக்கிய அங்கமாக வாழ்ந்து வருகிறது. எளிதில் மக்காத பொருள், இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று பல அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இருந்தாலும் யாரும் அதைப் பற்றி பெரிய அளவில் சிந்திப்பதில்லை. பிளாஸ்டிக்கின் உபயோகத்தை நம்மால் முற்றிலும் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அதிக அளவு கலக்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படைகின்றன. சுற்றுப்புற சீர்கேடு பற்றியும் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால் மனிதர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டால் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் உயிர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, கடலிலிருந்து பெறப்படும் உப்பு வழியாக மீண்டும் நம் உடலுக்குள்ளேயே வந்து சேர்கிறது என்னும் அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன. இனியாவது சிந்திப்போமா!

- ராஜேஷ் கண்ணா

Related Stories: