அலோவேரா என்னும் அற்புதம்!

நன்றி குங்குமம் தோழி

தலைமுடியின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மழைக்காலத்தின் சில்லென்ற காற்றினால், வறட்சி, பளபளப்பின்மை மற்றும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலங்களில் தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதே பலரின் கவலையாக இருக்கும். குறிப்பாக தலைமுடியில் உலர்நிலை, பளபளப்பின்மை மற்றும் சேதம் ஆகியவை பருவமழை காலத்தில் ஏற்படும் மூன்று பாதிப்புகளாகும். பருவமழை பெய்கின்ற காலத்தின்போது, தலைமுடியை உலர்வாக்கி உயிரோட்டமற்றதாக செய்து விடுவதால் இந்த காலகட்டத்தில் கூடுதல் அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது.

கெராட்டின் என அழைக்கப்படுகிற புரதத்தின் மீது முடி இழைகள் உருவாவதால் கெராட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறவாறு ஒரு சமநிலையிலான தலைமுடி பராமரிப்பு செயல்பாட்டை ஒருவர் பின்பற்றுவது அத்தியாவசியமாகும். இதன் மூலம் தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் பேணி வளர்க்கவும் முடியும். பருவமழை காலம் ஏற்படுத்தும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கு உங்கள் தலைமுடிக்கு புரதம் செறிவாகவுள்ள அலோவேரா அவசியப்படும் மேஜிக் மருந்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல பலன்கள் இருப்பினும், சருமத்தினை குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றும் காயங்களை குணப்படுத்தும் குணநலன்களுக்காக அலோவேரா புகழ்பெற்றிருக்கிறது.

அரிப்புக்கு எதிரான இதன் பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் நிலையிலிருந்து விடுவிக்கிறது; இதன் பூஞ்சைக்கு எதிரான பண்புகளோ, தலையில் பொடுகு வளர்ச்சியை குறைக்கிறது. சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சேதங்களிலிருந்து தலைமுடியை பாதுகாப்பதற்காக அதன் மீது ஒரு பாதுகாப்பு படலம் உருவாக அலோவேரா உதவுகிறது மற்றும் நீரேற்றத்தோடு இது இருக்குமாறு செய்கிறது. உங்களது தலைமுடியின் (pH)அடிப்படைத் தன்மையின் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவுவதே அலோவேராவின் முக்கிய பலன்களுள் ஒன்றாகும்;

ஏனெனில் உங்களது தலைமுடி எந்த அடிப்படை அளவில் இருக்க வேண்டுமோ அதே அளவை அலோவேராவும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். இந்த பருவமழை காலத்தின்போது உங்களது சருமம் பளபளப்பாகவும் மற்றும் புதுப்பொலிவோடும் இருப்பதற்கு உதவ அலோவேரா சேர்க்கப்பட்ட 5 வகை (தலைமுடி) ஹேர் மாஸ்க்குகளை பற்றி அரிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் காயத்ரி கபிலன்.

* பொடுகுக்கு ACV & ALV மாஸ்க்  

ஒரு கப் அலோ வேரா ஜெல்லில் இரு தேக்கரண்டி ஆர்கானிக் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவவும். 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிடவும். குளிர்ந்த நீரை கொண்டு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி இந்த மாஸ்க்-ஐ அலசி அகற்றவும். மண்டையோட்டின் மீது பொடுகு வளர்ச்சியை கட்டுப்படுத்த இது உதவுகிறது மற்றும் மண்டையோடு ஆரோக்கியமாக இருக்க இது காரணமாகிறது.

* பளபளப்பான முடிக்கு யோகர்ட் மற்றும் அலோவேரா

 

இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் வரை தடவவும். 10-15 நிமிடங்கள் வரை இந்த கலவையை மண்டையோட்டின் மீது நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இதைத் தொடர்ந்து ஒரு மிதமான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை நன்றாக நீரில் அலசவும் மற்றும் உங்களது தலைமுடி புதுப்பொலிவுடன் பளபளப்பதை காணவும்.

* முடி வளர்ச்சிக்காக அலோ வேரா மற்றும் விளக்கெண்ணெய்

ஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி வெந்தயப்பவுடர் சேர்த்துப் பசையாக உருவாக்கவும். உங்களது தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முனைகள் வரை இந்த மாஸ்க்-ஐ தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் இளம்சூடான வெந்நீரில் இந்த பசையை அலசி அகற்றவும். இதை தொடர்ந்து செய்து வருவது, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உத்வேகமளிக்க உதவுகிறது.  

* தலைமுடியின் உறுதிக்கு அலோவேரா மற்றும் முட்டை

உங்களது தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் உடைவதிலிருந்து அதை பாதுகாக்கவும் முட்டையும், வெள்ளைக்கருவும் மற்றும் அலோ வேராவும் மிக பொருத்தமான கலவையாகும். இரு முட்டைகளின் வெள்ளைக்கருவையும், இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் வழக்கமான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இருமுறை இந்த மாஸ்க்-ஐ பயன்படுத்துவது உங்களது தலைமுடி வலுவுடன் உறுதியாக்க உதவும்.

* முடி சுருள்வதை கட்டுப்படுத்தவும் மற்றும் வறட்சியை எதிர்க்கவும் தேங்காய் எண்ணெய் மற்றும் அலோவேரா

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அலோ வேரா ஜெல், இரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை மண்டையோட்டின் மீதும் மற்றும் தலைமுடியின் மீதும் நன்கு தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றி மூடவும். மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சியடைவதிலிருந்தும் மற்றும் சுருள்வதிலிருந்தும் தடுக்க இது உதவும்.

- தோ.திருத்துவராஜ்

Related Stories: