வெங்காயத்தாள் கூட்டு

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வெங்காயத்தாள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். இத்துடன் வேகவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் கலவையில் கொட்டி கலந்து சாதம், சப்பாத்திஉடன் பரிமாறவும்.

குறிப்பு: வெங்காயத்தாளில் உள்ள வெங்காயத்தையும் வதக்கி சேர்க்கலாம்.