×

ஒரே நாளில் 10,089 பேர் பலி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.68 கோடியாக உயர்வு; 15.34 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.!!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.34 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 15 லட்சத்து 34 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 089 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைபோல், உலகம் முழுவதும் கொரோனாவால் 6 கோடியை 68 லட்சத்து 47 ஆயிரத்து 041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 கோடியை 62 லட்சத்து 35 ஆயிரத்து 090 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 23 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 27 ஆயிரத்து 218 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், 1 கோடியை 90 லட்சத்து 77 ஆயிரத்து 607 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 06 ஆயிரத்து 026 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா   -    பாதிப்பு - 14,983,425  , உயிரிழப்பு - 287,825 , குணமடைந்தோர் - 8,787,738
இந்தியா      -    பாதிப்பு - 9,644,529 ,  உயிரிழப்பு - 140,216,  குணமடைந்தோர் - 9,099,946
பிரேசில்      -    பாதிப்பு - 6,577,177 ,  உயிரிழப்பு - 176,641 ,  குணமடைந்தோர் - 5,761,363

ரஷியா       -   பாதிப்பு - 2,431,731 ,  உயிரிழப்பு - 42,684  ,  குணமடைந்தோர் - 1,916,396
பிரான்ஸ்     -   பாதிப்பு - 2,281,475,  உயிரிழப்பு - 54,981   , குணமடைந்தோர்  - 169,358
இத்தாலி   -       பாதிப்பு - 1,709,991 ,  உயிரிழப்பு - 59,514 ,  குணமடைந்தோர்  - 896,308

அர்ஜென்டினா  -    பாதிப்பு - 1,459,832 ,  உயிரிழப்பு -39,632,  குணமடைந்தோர்- 1,288,785
கொலம்பியா   -    பாதிப்பு - 1,362,249 ,  உயிரிழப்பு- 37,633  ,குணமடைந்தோர்  -1,249,702

Tags : Corona , 10,089 people killed in a single day: worldwide corona victims rise to 6.68 crore; 15.34 lakh deaths !!!
× RELATED கொரோனா வைரஸ் தாக்குதலால்...