×

புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

புழல்: புழல் ஏரியின் முழுகொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது, 2996 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. விநாடிக்கு 1800  கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் உயரம் 21.20 அடி. தற்போது 19.92 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி உபரிநீர் வெளியேறுவது படிப்படியாக குறைக்கப்பட்டு, 284 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பின்னர் நேற்று மதியம் 2 மணி முதல் 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.


Tags : overflow opening ,Phuhl Lake , Increase in overflow opening in Phuhl Lake
× RELATED புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்