×

போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தச்சூர் கூட்டு சாலை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கினர். அதில்  1 கிலோ கஞ்சா, 60 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை இருந்தது.   அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த மணிகண்டன்(21). பிரபாகரன்(19) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(27) மற்றும் ரஞ்சித்(19) ஆகியோரிடம் இருந்து கஞ்சா, போதைப் பொருட்களை விற்பனை செய்ய வந்ததாக கூறினர். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். 


Tags : 4 arrested for drug smuggling
× RELATED நெல்லை மாவட்டத்தில் 2020ல் மணல் கடத்தல், போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு