×

வடமாநில வாலிபர்களை தாக்கி செல்போன் பறிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த காட்டூர் செல்வி நகர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் நிரஞ்சன்(20) மற்றும் விஜய்(20). நண்பர்கள். இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம். இருவரும் காட்டூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிரஞ்சன், விஜய் இருவரும் பணி முடிந்து கம்பெனியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் காட்டூர் தனியார் பாலிடெக்னிக் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 3 பேர் இவர்கள் இருவரையும் வழிமறித்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்து விஜயிடம் இருந்த செல்போனை பறித்தான்.

இதனை நிரஞ்சன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் நிரஞ்சனை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு செல்போனை பறித்து அங்கிருந்து தப்பினர். அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த நிரஞ்சனை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபர்களை தேடுகின்றனர்.Tags : teenagers ,North , Cellphone flush attacking teenagers in the North
× RELATED சாலை விபத்தில் வாலிபர்கள் பலி