×

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற 5 கோடி போதை பொருள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பொருட்களை தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது விமானத்தில் ஏற வந்த திருச்சி துவாக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (44) என்பவர், கையில் இருந்த சிறிய சூட்கேசுடன் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அவர், ‘‘என்னுடன் விமானத்தில் ஏற வந்தவர் இந்த சூட்கேசை கொடுத்தார். நீங்கள் முன்னால் செல்லுங்கள் ஒரு நிமிடத்தில் வந்து விடுவதாக கூறினார். அவர் வரவில்லை. அவர் கொடுத்த சூட்கேசில் எதோ இருக்கும் போல் இருக்கிறது. சந்தேகமாக இருக்கிறது,’’ என்றார்.  அதிகாரிகள் சூட்கேசை வாங்கி சோதனையிட்டனர். அதில் 1.2 கிலோ எடையில் பவுடர் இருந்தது. இதை பாலித்தீன் கவரில் ேபாட்டு சுற்றி சூட்கேசுக்குள் மறைத்து ஒட்டி வைத்திருந்தனர். இதை ஆய்வு செய்ததில் மருத்துவ அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மயக்க மருந்தான மெத்தாம் பெடமைன் என்பது தெரிய வந்தது. இதை சிலர் உச்சபட்ச போதைக்காக பயன்படுத்துகிறன்றனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ₹5 கோடி இருக்கும்.  Tags : Coimbatore ,Sharjah , 5 crore narcotics seized during a flight from Coimbatore to Sharjah
× RELATED சென்னை காரம்பாக்கத்தில் பதுங்கி...