×

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தடையின்றி ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

நெல்லை: ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இப்பயிற்சியை நேரடியாக வழங்காமல் ஆன்லைன் (இணையதளம்) மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கு கணினி தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 3ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி முகாம், வருகிற 8ம் தேதிவரை நடக்கிறது. இப்பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 510 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் ஒன்றரை மணி நேரம் வெவ்வேறு நேரங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி கற்பிப்பது எப்படி, கூகுள் மீட், ஜூம் மீட் போன்ற வகுப்புகளை நடத்துவது, பவர் பாயின்ட் முறையில் இணையதளம் மூலம் கற்பித்தல், கற்றல் கற்பித்தலின் போது இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.Tags : teachers ,Samakra Siksha , Training for teachers to conduct uninterrupted online class under Samakra Siksha program
× RELATED போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு