×

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு சென்னையில் 3.96 லட்சம் குடும்பங்கள் கணக்கெடுப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னையில் 3.96 லட்சம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு ஒன்றை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ளவர்களில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 422 பேர் தாங்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அவர்களின் தகவல்களை பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது : வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்த உள்ளோம்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணி 92 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் நிறைவடையும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் பல கூடுதல் சிகிச்சைகள் சேர்க்கப்பட்டு இருக்கும்.

ராயபுரத்தில் அதிகம் மணலியில் குறைவு
2004ம் ஆண்டு நடத்திய ஆய்வில் சென்னையில் 5.19 லட்சம் குடும்பங்கள் இருந்தன. தற்போது 3.96 லட்சம் குடும்பங்கள் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 50,138 குடும்பங்கள் உள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 11,077 குடும்பங்கள் உள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்
மண்டலம்    மொத்தம்    ஆய்வு செய்யப்பட்டவை     
திருவொற்றியூர்    29155    24592     
மணலி        11077    10016     
மாதவரம்        15689    14357     
த.பேட்டை    50138    40459     
ராயபுரம்        28820    28820           
திரு.வி.க.நகர்    44976    39376     
அம்பத்தூர்    20478    18119     
அண்ணாநகர்    27969    26144     
தே.பேட்டை    34377    31141     
கோடம்பாக்கம்    25106    24433     
வளசரவாக்கம்    24281    22314     
ஆலந்தூர்        13414    12618     
அடையாறு    32346    32776     
பெருங்குடி    19830    19331     
சோழிங்கநல்லூர்    18718    18172Tags : households ,Announcement ,Census ,Chennai , New medical insurance for those below the poverty line 3.96 lakh households surveyed in Chennai: Announcement coming soon
× RELATED பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று...