×

ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமன விவகாரத்தில் அண்ணா பல்கலை மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில்   கடந்த 2006, 2007, 2010ம் ஆண்டில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இவை 2012ல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டது.  இதன்பிறகு, அதில் பணியாற்றிய 63 ஆசிரியர்களையும், 13 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் நிரந்தரம் செய்யுமாறு பல்கலைக்கழக சிண்டிகேட்  நியமித்த வி.பி.முத்துசாமி அடங்கிய 7 பேர் கொண்ட குழு அறிக்கை தந்தது. ஆனால்,  அதை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.  

அதையும் பல்கலைக்கழகம் அமல்படுத்தவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், வி.பி.முத்துசாமி குழுவின் பரிந்துரையை அமல்படுத்த முடியாது என்று, 2020 பிப்ரவரியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சரவணகுமார் உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.உயர் கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக சிண்டிகேட் கூடி வி.பி.முத்துசாமி குழு பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கும் என்று ஒரு மனு தாக்கல் செய்தார். நீதிபதி அண்ணா பல்கலைக்கழத்தின் மீது தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags : Anna University ,ICC ,teachers , Teachers, staffing issue a contempt of court case against the Varsity mutittuvaippu: HC orders
× RELATED ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு...