×

எம்எல்ஏ கொலை வழக்கில் பாஜ துணை தலைவர் பெயர்: மேற்கு வங்க சிஐடி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் நடந்த சரஸ்வதி பூஜையின் போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகன்ஜ் தொகுதி எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை இம்மாநில சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜ,வில் இணைந்த மூத்த தலைவர் முகுல் ராயின் பெயர், இந்த கொலை வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இவர் பாஜ,வின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். இந்த கொலைக்கான சதிக்கு அவர் உடந்தையாக இருந்ததாக 2வது குற்றப்பத்திரிகையில் போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்தாண்டு மே மாதம் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்க்கவில்லை. இது அரசியல் பழிவாங்கும்செயல் என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.Tags : BJP ,vice president name ,MLA , BJP vice president name in MLA murder case: West Bengal CIT Action
× RELATED ஒடிசாவில் 2 பாஜ நிர்வாகிகள் வெட்டிக்...