×

சித்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்ய முடியுமா? அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழமையான கட்டிடத்தை இடிப்பதை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த டாக்டர் விஜய்விக்ரமன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ெசய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘ஆயுர்வேத மருத்துவ முறையில் சிலவற்றுக்கு அனுமதி வழங்கியது போல, சித்த மருத்துவ சிகிச்சை முறைகளில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்ெகாள்ள அனுமதிக்க முடியுமா’’ என்றனர். இதற்கு மத்திய அரசுத் தரப்பில், ‘‘சித்த மருத்துவர்கள் ஊசி ேபாட அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ எத்தனை சிறப்பு சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டன? அங்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டதா’’ என்றனர். இதற்கு தமிழக அரசுத் தரப்பில், ஆக்சிஜன் வசதி செய்யப்படவி ல்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெறும் போது மூச்சுத் திணறலோ, அவசர சிகிச்சையோ தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆச்சிஜன் அவசியம். எனவே, சித்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்வது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்கும்படி கூறி, ஒத்திவைத்தனர்.


Tags : hospitals ,branch ,iCourt , Can oxygen be provided in paranormal hospitals? Branch High Court ordered the government to respond
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...