மாதம் பிறந்து 5 நாட்களாகியும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு அதிருப்தி

சென்னை: மாதம் பிறந்து 5 நாட்களாகியும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் 10 ஆயிரம் முதல் ₹17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய ஊதியத்தில் அவர்களுக்கு சம்பளம் போடுவதற்கு 3 மாதம் அவகாசம் உள்ளது. அதன் பேரில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பழைய ஊதியத்தை வழங்க கோரி சம்பள கணக்கு அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பியிருக்கலாம்.

ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.  இதனால் கடந்த 30ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய ஊதியம் விகிதம் நிர்ணயம் செய்து மீண்டும் பட்டியலை அனுப்பி அதன் பிறகு ஊதியம் பெற மேலும் நாட்களாகும் என்று கூறப்படுகிறது. இது பொறியாளயர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூறுகையில், பல்வேறு அலுவலகங்களில் ஊதியத்தை குறைத்து நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கடந்த 2017 அக்டோபர் 11ன் படி ஒவ்வொரு தனிநபரும் 6வது 7வது ஊதியக்குழு ஊதியத்தை நிர்ணயித்து கொள்ள விருப்பத்தினை அளிக்க அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. இதனையேற்று பல்வேறு அலுவலகங்களில் நவம்பர் 2020 மாதத்திற்கான பொறியாளர்களின் ஊதிய பட்டியல், பழைய ஊதிய விகிதங்களின் படியே எந்த குறைப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. வேறு ஒரு சில அலுவலகங்களில் ஊதியத்தை குறைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது, முற்றிலும் விதிகளுக்கு முரணானது. நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கினால் ஊதியத்தினை பழையபடி மாற்றி அமைக்க வேண்டி வரும். எனவே, நீதிமன்ற முடிவினை எடுக்கும் வரை ஊதிய குறைப்பு நடவடிக்கைகளில் பொறுமை காப்பது நியாயமாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: