ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம்: விளையாட்டு வீரர்களிடமே விளையாடுவதா? ஆர்டிஐ பதிலில் உயர்மட்ட குழு கூடியதில் சர்ச்சை

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2013ல் உயர் மட்ட குழு கூடியதா? என்பது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு  ஆணையம் கடந்த 2012ல் ரூ.3 ஆயிரமாக ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்தனர். இந்த நிதியில் திடீரென கடந்த 2013ல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  மட்டுமே ஓய்வூதியம் வழங்க அப்போது உறுப்பினர் செயலாளராக இருந்த ராஜாராமன் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் கூடி திடீரென முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2013 நவம்பர் 23ம் தேதி 4 உறுப்பினர்களை கொண்டு கமிட்டி கூடியதாக எந்த வித முகாந்திரமும் இல்லை.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலை துணைவேந்தர், மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுச்செயலாளர் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளது. இத தொடர்பாக தகவல் உரிமை ஆணையத்தில் கேட்டதற்கு உடற்கல்வியியல் பல்கலை துணை வேந்தர் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், கூடாத உயர் கமிட்டியின் முடிவுக்கு கடந்த 2015 ஆகஸ்ட் 14ம் தேதி உறுப்பினர் செயலாளர் ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக விளையாட்டு வீரர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.  இது குறித்து ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நலிந்த விளையாட்டு வீரர்கள் கூறுகையில், மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டு இருப்பது சட்ட விரோதமான செயல். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு எங்களை போன்ற நலிவுற்ற  விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: