×

மின்தொடரமைப்பு கழகத்தில் 9ம் தேதி ஆலோசனை கூட்டம்

சென்னை: மின்தொடரமைப்புக்கழகத்தில் வரும் 9ம் தேதி அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை, அண்ணாசலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள 10வது மாடியில் உள்ள ஆலோசனைக்கூட்ட அரங்கத்தில் மின்தொடரமைப்புக்கழகத்தில் (டான்டிரான்ஸ்கோ) அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் வரும் 9ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில், விநியோகம், கட்டுமானம், செயலாக்கம், ஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் முக்கிய திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.


Tags : 9th Consultative Meeting ,Electricity Corporation , 9th Consultative Meeting at the Electricity Corporation
× RELATED பருவமழையின்போது தடையற்ற மின்...