×

நிவர் புயலின்போது பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு 1 நாள் விடுப்பு எடுக்க அனுமதி: எஸ்இடிசி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு  கடந்த 26ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் 24.11.2020 இரவு 9 மணி முதல் 26.11.2020, காலை 6 மணி வரை தடை உத்தரவு இருந்தது. எனவே இதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 25.அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் அத்தியாவசிய பணிக்காக பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்று விடுப்பாக ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும் 26ம் தேதி நிவர் புயல் காரணமாக புயல் பாதித்த இடங்களான தஞ்சாவூர், புதுச்சேரி, சென்னை, நாகப்பட்டினம் பணிமனைகளுக்கு மட்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் அத்தியாவசிய பணிபுரிந்த பணியாளர்களுக்கு மட்டும் ஒரு நாள் மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : transport workers ,SETC ,storm ,Nivar , ermission to take 1 day leave for transport workers who worked during the Nivar storm: SETC management notice
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்