×

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறிய வேளாண் அமைச்சரை சுட்டுக் கொல்வதாக மிரட்டல்: அரியானா போலீசார் விசாரணை

பிவானி: துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாக அரியானா மாநில வேளாண் அமைச்சருக்கு கொலை மிரட்டல் நபர் குறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவில் பாஜக - ஜனநாயக ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக பாஜகவை சேர்ந்த மனோகர் லால் கட்டாரும், துணை முதல்வராக ஜஜக தலைவர் துஷ்யந்த் சவுடாலாவும் உள்ளனர். இந்நிலையில் அம்மாநில வேளாண் அமைச்சர் ஜே.பி.தலால் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாக போனில் மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக பிவானி போலீஸ் சூப்பிரண்டு சுமர் பிரதாப் விசாரணை நடத்தினார்.

அமைச்சருக்கு எதிரான கொலை மிரட்டல் குறித்த அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் வித்யானந்த் கூறுகையில், ‘அமைச்சர் மற்றும் பத்திரிகையாளருக்கு எதிராக துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவதாக மர்ம நபர் தொலைபேசியில் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரிடம் பேசியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட மர்ம நபர், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூர் கிராமத்திலிருந்து பேசியுள்ளார். மிரட்டல் விடுக்கப்பட்ட நபரின் தொலைபேசி எண் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுெதாடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு, இரண்டு தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், வேளாண் அமைச்சர் ஜே.பி.தலால், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விவசாயிகள் இயக்கத்தில் வெளிநாட்டு சக்திகளின் பங்கு உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை குறிப்பிட்ட இந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. அதையடுத்து அடையாளம் தெரியாத நபர் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், அவர் அமைச்சரையும் கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து ஐபிசி பிரிவு 294, 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.


Tags : Agriculture Minister ,strike ,police investigation ,Haryana , Haryana police probe threat to shoot agriculture minister
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து