×

‘டாப்பு’ கழண்டதால் திண்டாட்டம்: அரசு பஸ்சுக்குள் ‘அடைமழை’ குடை பிடித்து மக்கள் பயணம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வழித்தடத்தில் ஓட்டை, உடைசலாக இயக்கப்படும் அரசு பஸ்களின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுவதால், பயணிகள் குடை பிடித்து பயணம் செய்யும் அவலநிலை தொடர்கிறது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறைக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்படி இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்து மிகவும் பழுதடைந்து ஓட்டை, உடைசலாக உள்ளன. பஸ்சின் மேல்பக்க கண்ணாடி இல்லாமல் உள்ளன. மேலும் பஸ்சில் உள்ள அனைத்து ஜன்னல் கதவுகளும் பழுதடைந்து திறக்க முடியாத நிலையில் உள்ளன. கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக குஜிலியம்பாறை பகுதியில் தொடர்ந்து இடைவிடாது மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு கரூரில் இருந்து குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்பட்ட அரசு பஸ் மிகவும் பழுதடைந்த நிலையில், மேற்கூரை முழுவதும் சேதமடைந்து இருந்தது. அப்போது பெய்த மழையில் பஸ்சின் மேற்கூரையில் இருந்து மழைநீர் முழுவதும் ஒழுகி பயணிகள் மேல் விழுந்தது. இதில் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர். குடை வைத்திருந்த ஒரு சில பயணிகள் குடையை பிடித்தபடி பயணம் செய்தனர். பயணிகள் கூறுகையில், ``குஜிலியம்பாறை வழித்தடத்தில் மிகவும் மோசமாக நிலையில் இயக்கப்படும் அரசு பஸ்களை மாற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : ‘Tapu’ People traveling under the umbrella of the government bus ‘adaimazhi’
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...