×

துரைக்கண்ணுவிடம் கொடுத்தது ரூ800 கோடி அல்ல ரூ2000 கோடியாம்?.. பணத்தை மீட்க 17 பேர் சிறப்பு டீம் குடந்தை, பாபநாசத்தில் முகாமிட்டு ரகசிய விசாரணை

சென்னை: துரைக்கண்ணுவிடம் கட்சி தலைமை கொடுத்தது ரூ800 கோடி அல்ல ரூ2000 கோடி என ெதரியவந்துள்ளது. முதல் கட்டமாக ₹800 கோடியை கொடுத்துதான் துரைக்கண்ணு உடலையே வாங்கி வந்தனராம். மீதி 1200 கோடியை மீட்க மேலிட அழுத்தத்தால் 17 போலீசார் கொண்ட ஸ்பெஷல் டீம் குடந்தை, பாபநாசத்தில் முகாமிட்டு  ரகசிய விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு இறந்ததால் அவரிடம், மாவட்டத்தில் தொகுதிகளை பலப்படுத்த ஆளும்கட்சி கொடுத்த ₹800 கோடி என்ன ஆனது என தெரியவில்லை. இதுபற்றி ரகசிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையிலிருந்து 17 பேர் கொண்ட போலீஸ் குழு வந்து 2 பிரிவுகளாக பிரிந்து கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மப்டியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துரைக்கண்ணுவிடம் தொகுதியை பலப்படுத்த கட்சி தலைமை அவரிடம் கொடுத்தது ரூ800 கோடி அல்ல  தொகுதிக்கு ரூ500 கோடி என 4 தொகுதிக்கு ₹2000 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது புதிய பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது: தொகுதியை பலப்படுத்த ஒரு தொகுதிக்கு ரூ200 கோடி கொடுத்ததாக கூறப்பட்டது உண்மையில்லை. ஒரு தொகுதிக்கு ரூ500 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை துரைக்கண்ணுவிடம் கொடுத்த போதே கட்சி ரீதியானது என்பதால் துரைக்கண்ணுவிடம் உரிய ஆவணத்தில் தலைமை கையெழுத்து பெற்ற பின்னரே கொடுத்ததாம். இதுவெளியில் தெரிந்தால் பூகம்பம் வெடிக்கும் என வெளியில் சொல்லவில்லையாம். இந்நிலையில் துரைக்கண்ணு இறந்ததால் அவரது உடலை ஒப்படைக்க முடியாது. பணத்தை கொடுத்தால் தான் ஒப்படைக்க முடியும் என  கட்சி தலைமை கறாராக கூறிவிட்டதாம். இதனால் ஐயப்பன் வேறுவழியின்றி, முதல்கட்டமாக ரூ800 கோடியை கொடுத்துள்ளார். அதன்பின்னர் தான் உடலை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ₹2 ஆயிரம் கோடியில் கால் பங்கு தான் வசூலாகி உள்ளதாம். மீதி பணத்தை வசூலிக்கவே கட்சி தலைமை சிறப்பு போலீஸ் குழுவை அனுப்பி உள்ளூர் போலீசார் உதவியை நாடாமல் விசாரித்து வருகின்றனராம். எப்ஐஆர் போடாமல் போலீசார் நேரடியாக விசாரிக்க்க மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுத்ததால் தான் ஸ்பெஷல் டீம் குழுக்களாக தனித்தனியாக பிரிந்து மப்டியில் சென்று துரைக்கண்ணுவுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது, பணம் எங்கெங்கு கைமாறியது, யார், யாரிடம் பணம் உள்ளது என  கடந்த ஒரு மாதமாக கண்காணித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் துரைக்கண்ணுவின் மகன்  ஐயப்பன் கபிஸ்தலம் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளாராம். துரைக்கண்ணு இருந்தபோதே ஐயப்பன் கபிஸ்தலத்தில் உள்ள  அரசு சுற்றுலா விடுதியில தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, பேசுவது என இருந்து வந்தார். துரைகண்ணு இறந்த பின்னரும் அவர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட, அவர் நிர்வாகிகளை அழைத்து அங்கு ரகசிய ஆலோசனை நடத்தினாராம். இதில் எதுபற்றி ஆலோசனை நடத்தினார்கள் என ஸ்பெஷல் டீம் ரகசியமாக விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Durakkannu , Rs 800 crore or Rs 2000 crore was given to Durakkannu?
× RELATED அதிமுக கட்சி பணம் தொடர்பான விவகாரம் அமைச்சர் துரைக்கண்ணு மகன் விளக்கம்