×

சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தல்படி குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பம் உள்ள நிலையில் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மூலமாக மிகப்பெரிய சேவையாக ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர், பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 5.3 லட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு வரக்கூடிய 13ஆம் தேதி வரை காலையில் உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்தவொரு முக்கியமான முடிவை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai Corporation ,slum dwellers ,Chennai , Chennai Corporation, Free Food Scheme
× RELATED டெல்லி குடிசைவாசிகளுக்கு 10 ஆயிரம்...