×

புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாடு ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும் ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

புரவி புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களையும் நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

உணவு பொட்டலங்கள், குடிநீர், குழந்தைகளுக்கு பால் பவுடர்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப நடமாடும் உணவகங்கள் அமைத்து சூடான உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.சி.சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையை உள்ளடக்கிய நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ய எஸ்.பி.வேலுமணி,ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் ஆகியோரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோரும், சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Tags : families ,storm ,Chief Minister , Storm, heavy rain, relief
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...